Pongal wishes in Tamil 2023 | பொங்கல் வாழ்த்துகள் 2023
Pongal wishes in Tamil 2023
பொங்கல் திருநாள் என்பது உழவர்களுக்காகவும், உழவுக்கு தோள் கொடுத்து உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானுகாவும், உழவன் தன் உயிர் போல நினைக்கும் மாடுகளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு விழாவாகும்.
போகி, பெரும் பொங்கல் ( Pongal wishes in Tamil ), மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டப்படும் இந்த சிறப்பு விழாவில் உலகெங்கும் உள்ள தமிழ் குடும்பங்கள் புத்தாடைகள் அணிந்து, பொங்கலிட்டு, மற்றவர்களிடம் தங்களது அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது வழக்கமாகும்.
ஆனால் சில காரணங்களால் ஒரு சிலரால் நேரில் பொங்கல் வாழ்த்துகள் (Pongal valthukkal 2023) கூற இயலாத சூழல் இருக்கும். அப்படி பட்டவர்கள் தங்கள் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பக்கூடிய வகையில் பொங்கல் வாழ்த்துக்கள் 2023 இதோ உங்களுக்காக.
2023 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் தைப்பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி வருகிறது. இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி கரும்புகளை சுவைத்து, புதுப்பானையில் பொங்கல் வைப்பது வழக்கமாகும். பொங்கல் என்றாலே கிராமங்களில் ஒரு தனி கொண்டாட்டமாக தான் இருக்கும். நாம் வீட்டை வெள்ளை அடித்து, வாசலை நன்கு அலங்கரித்து பொங்கல் கோலமிட்டு உணர்வு பூர்வமாக கொண்டாடக்கூடிய ஒரு நன்னாளாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. இந்த பொங்கல் திருநாளுக்குரிய பொங்கல் வாழ்த்துகள் (Pongal valthukkal 2023) இதோ.
Pongal wishes in Tamil 2023
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2023
இல்லங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2023
கரும்பின் சுவை போல வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2023 வளமும் நலமும் பொங்கிட அன்பும் பண்பும் பெருகிட உறவும் நட்பும் கூடிட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
ஊருக்கே சோர்போடும் உழவனுக்கும் உலகுக்கே ஒளியேற்றும் கதிரவனுக்கும் நன்றி கூறி கொண்டாடுவோம் இந்த திருநாளை. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நல்லதொரு வாழ்வு பொங்கிட அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட இந்நாளை போல எந்நாளும் தித்தித்திட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
அறிவு தங்க, அன்பு பொங்க நேர்மை தங்க, வளமை பொங்க வலிமை தங்க, இனிமை பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
புத்தாடையில் ஜொலித்திட புத்தரிசியில் பொங்கலிட உழவனை கொண்டாட தமிழனாய் தலை நிமிர்ந்திட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
உழைப்பது உழவனானாலும் உண்ணுவது நாமே களைத்தவன் உழவனானாலும் செழித்தவன் நாமே தாய், தந்தை மட்டும் அல்ல தாயகத்தில் உள்ள உழவர் அனைவரும் நமக்கு தெய்வமே இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
காசுக்கு கரும்பு வாங்கி அதை கால் பாகமாக உடைத்து கடவாய் பல்லில் கடித்து தித்திப்போடு கொண்டாடுவோம் இந்த பொங்கல் திருநாளை இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
துணிவோடு துன்பங்களை எதிர்த்து இனிப்போடு இன்பங்களை சேர்த்து கனிவோடு உறவுகளை வளர்த்து கொண்டாடுவோம் தை திருநாளை இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழவனோ கடனில் பொங்க உலகமோ அவன் விதைத்த நெல்மணிகளை பொங்குகிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல் வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள் மனதினிலேயே தீரட்டும் சங்கடங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
THIRUMANA PORUTHAM | திருமணப் பொருத்தம் |
THIRUMANA PORUTHAM CALCULATOR |
Pongal wishes in Tamil 2023
தை பிறந்தாச்சு, வழியும் பிறந்தாச்சு பொங்கட்டும் புது பானையில் பொங்கல் இனிக்கட்டும் புது கரும்போடு வாழ்க்கை இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்பும், அறிவும், ஆசையும், இன்பமும் இந்த திருநாளில் பொங்கலோடு சேர்ந்து பொங்கட்டும். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அச்சு வெல்லம், பச்சரிசி கலந்து வச்சி ஆதவனை துதித்துவிட்டு சொந்தங்கள், பந்தங்கள் ஊர் கூடி கொண்டாடுவோம் வாருங்கள் இத்திருநாளை. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
மங்கலமாய் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும் எண்ணிய அனைத்தும் ஈடேறட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
புதியதோர் மகிழ்ச்சி பொங்க வீடு நிறைய செல்வம் தங்க இனிமையும் வளமையும் சேர்ந்து இன்பத்தில் வாழ்க்கை திளைக்க தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
செந்தமிழை பெருமையோடு உச்சரிக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
மனதிற்கு பிடித்த அனைத்தும் நடந்து மங்களங்கள் அனைத்தும் வந்து சேரட்டும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பச்சரிசியில் பொங்கல் வைத்து பகலவனை வணங்கிவிட்டு பண்பாட்டை போற்றிவிட்டு பண்போடு வாழுவோமே
Read Also
Convert Thanglish to Tamil Easy Typing Tool 2023